பெண் நிலவு நீதானோ💕
வரிகள் இல்லாத வார்த்தை நீயே😘
வளைவுகள் இல்லாத வானவில் தானே💕
.
வில்லம்பு இன்றி உன் பார்வை என் heart ஐ துளைக்குதடி🙈
உன் அழகை கண்டு என் ஹார்மோன் எல்லாம் இறக்குதடி😍
.
பத்து மாதத்தில் பிரம்மன் செய்த பஞ்சவர்ண கிளியே💙
பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் இந்த நூற்றாண்டின் சீதை நீயே🥰
.
காந்தர்வ கண்ணழகி
கடைவிழி பார்வையில் என் மனதை கவர்ந்தெடுத்த பேரழகி
.
நான் படிக்காத வரி எல்லாம் உன் உதட்டினில் புதைத்து விட்டாய்😻
உன்னை பார்க்கையில் என் உயிர் மொத்தமும் கடைந்து எடுத்துவிட்டாய்🙈
.
பெண் நிலவு உன்னை பார்த்து வெண்ணிலவும் பொறாமை கொள்ளும்
பேரழகி உன்னை கண்டால் கல்லுக்கும் கவிதை சொல்ல வரும்
உன்னை
காண்பவருக்கும் கொஞ்சம் காய்ச்சல் வரும்😍
.
ஏற்ற இறக்கங்கள் ஏதும் இல்லா புது சங்கீதம் நீயடி
நான் கண்டு வியந்த மோகன ராகமடி
.
எதுகை மோனை ஏதுமில்லா உந்தன் பெண்மைதனை பார்க்கையில் கொட்டி வைத்த என் ஆண்மையெல்லாம் விழித்து உன்னை பார்க்குது
.
பிரம்ம முகூர்த்தத்தில் செய்த பிரம்மனின் மூத்த புதல்வியே😻
பிழைகள் ஏதும் இல்லாத குட்டி பெண்ணே😽
.
நிலவின் நிழல் எடுத்து செய்த நிஜம் நீயோ- இல்லை
நீ நிலவுக்கு நிகரான எழில் தானோ😘
.
வாடாத மலர் ஒன்றை பிரம்மன் பூமிக்கு அனுப்பி வைத்தான்
அதற்கு உன் பெயரை தான் சூழுரைத்தான்
.
வீழாத சாம்ராஜ்ஜியம் உன் அழகில் வீழ்ந்ததடி - பெண்மை உன்னிடத்தில் கொஞ்சம் கூடுதலாக வாழுதடி!
.
பொய் இல்லா கவிதைகள் தான் இங்கு உண்டு - உன்னை பார்த்த பின்பு என் கவிதைக்கும் விதிவிலக்கு உண்டு
.
அழியாத பெருங்கடல் உன்னை கண்டதும் கவிதைகள் அலையாய் கொட்டுதடி
கொஞ்சம் மறந்து போன உணர்வுகளும் மீண்டும் எட்டி பார்க்குதடி💞
.
என் வரிகள் என்றும் உனக்காக காத்திருக்கும்💕
வர்ணனை எல்லாம் உன் அழகை சொல்லிட புதிதாக உயிர் பெற்றிருக்கும்💙
.
வேண்டுமென்றால் சொல்
உன் வாசம் தனை இவ்வுலகம் அறிய செய்கின்றேன்🥰
-தகுதியற்ற கவிஞன்
அழகான கவிதை
ReplyDelete